2-ஆம் லெப்டினன்ட் கோமதி அவர்கள் 154-ஆம் கட்டை, முறிகண்டி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். சாமித்தேவர் இலக்குமிபிரமிளா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 மார்ச் 1996 அன்று யாழ். மாவட்டம் சுதுமலைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.