2-ஆம் லெப்டினன்ட் தென்னவன் அவர்கள் இரணைமடு, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். செல்வராசா சந்திரகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 நவம்பர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது தாயக மண்ணை மீட்டெடுக்கும் புனிதப் போரில் எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் மகத்தானவை. அவற்றைச் சொற்களால் செதுக்கிவிட முடியாது. உலக வரலாற்றில் எங்குமே, என்றுமே நிகழாத அற்புதங்கள் இந்த மண்ணில், இந்த மண்ணிற்காக நிகழ்ந்திருக்கிறது. அந்த வீரகாவியத்தைப் படைத்த ஆயிரமாயிரம் மாவீரரின் இலட்சியக்கனவு அவர்களது ஆன்மீக தாகம் என்றோ ஒரு நாள் நிறைவு பெறுவது திண்ணம்.