கப்டன் கரிகாலன் அவர்கள் இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். செல்லத்துரை கலியுகவரதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 நவம்பர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.