லெப்டினன்ட் அருள் அவர்கள் உப்புக்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். யூசப் ஜாசிர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது 5 நவம்பர் 1995 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.