மேஜர் சத்தியராஜ் அவர்கள் 8-ஆம் வட்டாரம், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தர்மலிங்கம் சிவராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.