2-ஆம் லெப்டினன்ட் ரெஜினோல்ட் அவர்கள் முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கபிரியேல் பேனாட் மரியநாயகம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 அக்டோபர் 1987 அன்று யாழ். மாவட்டம் பலாலி இந்தியப் படையினர் முகாமில் இந்திய - சிறிலங்கா கூட்டுச்சதியை அம்பலப்படுத்துவதற்காக சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.