கப்டன் பழனி அவர்கள் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பாலசுப்பிரமணியம் யோகேந்திரராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 அக்டோபர் 1987 அன்று யாழ். மாவட்டம் பலாலி இந்தியப் படையினர் முகாமில் இந்திய - சிறிலங்கா கூட்டுச்சதியை அம்பலப்படுத்துவதற்காக சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக மண்ணை மீட்டெடுக்கும் புனிதப் போரில் எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் மகத்தானவை. அவற்றைச் சொற்களால் செதுக்கிவிட முடியாது. உலக வரலாற்றில் எங்குமே, என்றுமே நிகழாத அற்புதங்கள் இந்த மண்ணில், இந்த மண்ணிற்காக நிகழ்ந்திருக்கிறது. அந்த வீரகாவியத்தைப் படைத்த ஆயிரமாயிரம் மாவீரரின் இலட்சியக்கனவு அவர்களது ஆன்மீக தாகம் என்றோ ஒரு நாள் நிறைவு பெறுவது திண்ணம்.