லெப்.கேணல் புலேந்திரன் அவர்கள் பாலையூற்று, திருகோணமலையைச் சேர்ந்தவர். குணநாயகம் தருமராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திருகோணமலை மாவட்ட தளபதியாகவும் மத்தியகுழு உறுப்பினராகவும் கடமையாற்றினார். 5 அக்டோபர் 1987 அன்று யாழ். மாவட்டம் பலாலி இந்தியப் படையினர் முகாமில் இந்திய - சிறிலங்கா கூட்டுச்சதியை அம்பலப்படுத்துவதற்காக சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரரின் முழு விவரங்கள்
சேவை விவரங்கள்
நிலை
லெப்.கேணல்
இயக்கப் பெயர்
புலேந்திரன்
பொறுப்பு
திருகோணமலை மாவட்ட தளபதியும் மத்தியகுழு உறுப்பினரும்
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.