லெப்டினன்ட் புகழ்வேந்தன் (நிலோஜன்) அவர்கள் கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். வெற்றிவேல் விக்கினேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 ஜூலை 1995 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாற்றுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஐந்து பாரிய முகாம்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.