மேஜர் கபிலன் (கபில்) அவர்கள் கந்தபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். தெய்வேந்திரன் புவனேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 நவம்பர் 1994 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பாலத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.