மேஜர் அன்பண்ணல் (பரமன்) அவர்கள் கிரான், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கந்தசாமி ஜெயசீலன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 நவம்பர் 1994 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பாலத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.