வீரவேங்கை மஜீத் அவர்கள் பொன்னாலை தெற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். வரதராசா மங்களேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 ஜூன் 1987 அன்று யாழ். மாவட்டம் குரும்பசிட்டிப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் சிறு (மினி) முகாம் தகர்ப்பு முயற்சியின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.