கப்டன் பூவழகு (வினோத்) அவர்கள் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். வின்சன்அன்ரனி விஜித்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 ஏப்ரல் 1994 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறுக் கோட்டத்தில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.