வீரவேங்கை வர்ணகுலன் (சுனில்) அவர்கள் கிரான், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். பூபாலப்பிள்ளை சிவநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 மார்ச் 1994 அன்று மட்டக்களப்பு மாவட்டம் செம்பிமடுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.