கப்டன் கமலேசன் (ஜராட்) அவர்கள் கோவில்போரதீவு, பெரியபோரதீவு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கமலநாதன் சுதாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 நவம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.