லெப்டினன்ட் அன்புமணி (சுனில்) அவர்கள் துணுக்காய், மல்லாவி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். செல்லையா வால்ஜெயக்கொடி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 நவம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச் சிற்பிகள், எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.