கப்டன் பாரதிதாசன் அவர்கள் வத்திராயன், உடுத்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். வல்லிபுரம் சிறீசங்கர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 அக்டோபர் 1993 அன்று தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.