லெப்டினன்ட் சைமன் அவர்கள் பொத்துவில், அம்பாறையைச் சேர்ந்தவர். கனகரத்தினம் ரஞ்சன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 பிப்ரவரி 1985 அன்று முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.