2-ஆம் லெப்டினன்ட் தங்கன் அவர்கள் ஒத்தாச்சிமடம், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அழகையா ஜயாத்துரை என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 டிசம்பர் 1992 அன்று மன்னார் மாவட்டம் நானாட்டன் மற்றும் மாதிரிக்கிராமம் சிறிலங்கா படை முகாம்களுக்கிடையில் அமைந்திருந்த காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.