கப்டன் காசி அவர்கள் குமாணயங்குளம், அடம்பன், மன்னாரைச் சேர்ந்தவர். சூசை ஸ்ரானிலஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 அக்டோபர் 1992 அன்று மன்னார் மாவட்டம் முருங்கன் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.