வீரவேங்கை அருள்மணி (பழனி) அவர்கள் பொத்துவில், அம்பாறையைச் சேர்ந்தவர். தங்கத்துரை பிறேமச்சந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 மே 1992 அன்று மட்டக்களப்பு மாவட்டம் குருமன்வெளிப் பகுதியில் ரெலோ கும்பலின் சுற்றி வளைப்பில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.