வீரவேங்கை புண்ணியன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர். இருதயம் மைக்கல் கொலின் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 நவம்பர் 1986 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கள்ளியந்தீவுப் பகுதியில் சிறிலங்கா அதிரடிப் படையினருடனான சமரின்போது சயனைட் உட்கொண்டு கைக்குண்டை வெடிக்கவைத்து வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.