வீரவேங்கை சாப்தீன் அவர்கள் மருதங்குளம், புத்துவெட்டுவான், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். சரவணமுத்து இராஜேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 ஆகஸ்ட் 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவுப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.