2-ஆம் லெப்டினன்ட் விக்கி அவர்கள் பூந்தோட்டம், வவுனியாவைச் சேர்ந்தவர். சதாசிவம் விக்கினேஸ்வரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 ஆகஸ்ட் 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு முகாமிலிருந்து முன்நகர முயன்ற சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.