வீரவேங்கை டலஸ் அவர்கள் அம்பாள்குளம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். குழந்தைவேல் ஜெயரட்ணம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 ஆகஸ்ட் 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு முகாமிலிருந்து முன்நகர முயன்ற சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.