வீரவேங்கை குணேஸ் அவர்கள் தலைமன்னார் துறைமுகம், மன்னாரைச் சேர்ந்தவர். கறுப்பையா திவாகர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 ஆகஸ்ட் 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு முகாமிலிருந்து முன்நகர முயன்ற சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.