வீரவேங்கை நிதி அவர்கள் கச்சாய் தெற்கு, கொடிகாமம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். செல்லத்துரை வசந்தமலர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 ஆகஸ்ட் 1991 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி - ஆனையிறவு படை சங்கிலித்தொடர் நிலைகள் மீது புல்லாவெளிப் பகுதியில் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.