2-ஆம் லெப்டினன்ட் அருண் அவர்கள் மாதகல் மேற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கோவிந்தசாமி அருளானந்தம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 ஆகஸ்ட் 1991 அன்று யாழ். மாவட்டம் புல்லாவெளிப் பகுதியிலிருந்து ஆனையிறவு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.