வீரவேங்கை கம்பன் (சக்தி) அவர்கள் காஞ்சிபுரம், மாதகல், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நா. கனகராசா சத்தியகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 ஜூலை 1991 அன்று யாழ். மாவட்டம் புல்லாவெளிப் பகுதியிலிருந்து ஆனையிறவு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.