வீரவேங்கை காயத்திரி அவர்கள் றெட்பானா, விசுவமடு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். சந்திரசேகரம் உமாதேவி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 ஜூலை 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு தடை முகாம் மீதான 2வது தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.