வீரவேங்கை கார்த்திகா அவர்கள் நாவாந்துறை வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சூசைப்பிள்ளை மேரிகலிஸ்ரா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 ஜூலை 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு தடை முகாம் மீதான 2வது தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.