வீரவேங்கை வரதன் (வரதராஜன்) அவர்கள் பெரியபுல்லுமலை ஏற்றம், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். மாசிலாமணி மகேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 ஜூலை 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு தடை முகாம் மீதான 2வது தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது தாயக மண்ணை மீட்டெடுக்கும் புனிதப் போரில் எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் மகத்தானவை. அவற்றைச் சொற்களால் செதுக்கிவிட முடியாது. உலக வரலாற்றில் எங்குமே, என்றுமே நிகழாத அற்புதங்கள் இந்த மண்ணில், இந்த மண்ணிற்காக நிகழ்ந்திருக்கிறது. அந்த வீரகாவியத்தைப் படைத்த ஆயிரமாயிரம் மாவீரரின் இலட்சியக்கனவு அவர்களது ஆன்மீக தாகம் என்றோ ஒரு நாள் நிறைவு பெறுவது திண்ணம்.