வீரவேங்கை டிலா அவர்கள் பரியாரிகண்டல், முருங்கன், மன்னாரைச் சேர்ந்தவர். நீக்கிலாப்பிள்ளை செபத்தியம்மா(ஆனந்தி) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 ஜூலை 1991 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணிப் பகுதியிலிருந்து முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.