2-ஆம் லெப்டினன்ட் இதயன் அவர்கள் வெருகல், மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். சுப்பிரமணியம் சுந்தர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 ஜூலை 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு தடை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.