2-ஆம் லெப்டினன்ட் சுதன் அவர்கள் பாலையடி, புதுக்குளம், வட்டக்கண்டல், மன்னாரைச் சேர்ந்தவர். செபமாலை யேசுதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஜூலை 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு சுற்றுலா தங்ககப் படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.