வீரவேங்கை செல்வா அவர்கள் மாங்கேணி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். பொன்னம்பலம் விஜயன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 ஜூன் 1991 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கோட்டத்தில் சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா படையினர் மீதான அதிரடித் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச் சிற்பிகள், எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.