வீரவேங்கை அண்ணாத்துரை அவர்கள் தம்பலகாமம், திருகோணமலையைச் சேர்ந்தவர். ஐயம்பிள்ளை தவராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 ஜூன் 1991 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கோட்டத்தில் சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா படையினர் மீதான அதிரடித் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.