வீரவேங்கை சிவா அவர்கள் நொச்சிமுனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சோமசுந்தரம் சிவகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 ஜூன் 1991 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கல்லடிப் பகுதியில் தேசத் துரோகிகள் கைது செய்ய முயன்றபோது சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.