வீரவேங்கை ஞானமுத்து அவர்கள் பள்ளிமுனை, மன்னாரைச் சேர்ந்தவர். ஜோன் பற்றிக் அந்தோனி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 பிப்ரவரி 1991 அன்று மன்னார் மாவட்டம் கொண்டச்சிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடிச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.