2-ஆம் லெப்டினன்ட் பரம் அவர்கள் முட்டுச்சேனை, வெருகல், மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். வேலாயுதம் மோகனதேவன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 பிப்ரவரி 1991 அன்று திருகோணமலை மாவட்டம் மூதூர் இலக்கந்தைப் பகுதியில் மிதிவெடியில் சிக்கி விழுப்புண்ணடைந்த நிலையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச் சிற்பிகள், எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.