2-ஆம் லெப்டினன்ட் மாரியாச்சி அவர்கள் பாரதி ஒழுங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். குணசிங்கம் அருள்மொழி (சிந்தனா) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 23 நவம்பர் 1990 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை, அவர்களது தியாகங்கள், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால், வியர்வையால், கண்ணீரால் எழுதப்பட்டது.