2-ஆம் லெப்டினன்ட் குமரன் அவர்கள் நெளுக்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். பொன்னையா சிவசத்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 23 நவம்பர் 1990 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.