வீரவேங்கை றொபேக்கா அவர்கள் தம்பகாமம், பளை, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். பொன்னையா வனிதா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 நவம்பர் 1990 அன்று யாழ். மாவட்டம் மாவிட்டபுரம் தச்சன்காடுப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் தகர்ப்பின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.