மேஜர் சஞ்சிகா அவர்கள் அச்செழு, கரவெட்டி கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சுந்தரராஜன் கலைச்செல்வி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 நவம்பர் 1990 அன்று யாழ். மாவட்டம் மாவிட்டபுரம் தச்சன்காடுப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் தகர்ப்பின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.