மேஜர் சங்கர் அவர்கள் தம்பலகாமம், திருகோணமலையைச் சேர்ந்தவர். அரியரட்ணம் லோகிதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 நவம்பர் 1990 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு முந்திரிகைக்குளப் பகுதியில் சிறிலங்கா படை சிறு (மினி) முகாம் தாக்கியழிக்கப்பட்டபோது இடம்பெற்ற சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச் சிற்பிகள், எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.