லெப்டினன்ட் மரியதாஸ் அவர்கள் கொண்டல்கட்டை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பாலச்சந்திரமூர்த்தி காந்திதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 அக்டோபர் 1990 அன்று யாழ். மாவட்டம் பலாலிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஜெயசக்தி நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.