மாவீரர் நக்கீரன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர். விஜயரட்ணம் டிலோல்ட் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 மே 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் சிறிலங்கா படைகளின் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை களமாடி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.