மாவீரர் குமணன் அவர்கள் புலோலி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பேராசிரியன் நாவேந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் புலனாய்வுத்துறை தாக்குதலணித் தளபதியாகக் கடமையாற்றினார். 17 மே 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் சிறிலங்கா படைகளின் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை களமாடி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.