2-ஆம் லெப்டினன்ட் வசி அவர்கள் பாலையடி, விநாயகபுரம், துணுக்காய், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். சுப்பிரமணியம் கணேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 செப்டம்பர் 1990 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.