மாவீரர் கபிலம்மான் (கபிலன்) அவர்கள் லிங்கநகர், திருகோணமலையைச் சேர்ந்தவர். இராஜதுரை செல்வராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளராகக் கடமையாற்றினார். 18 மே 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் சிறிலங்கா படைகளின் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை களமாடி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.